சென்னை: தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி முறையிலான தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். பார்வையற்றோரும் திருக்குறள் மற்றும்,  நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் வரும் பார்வையற்றோர் மற்றும் அங்கு பணிபுரியும் பார்வையற்றோர், எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் படிக்கட்டுகள் மற்றும் நுழைவாயில், கழிவறை  பகுதிகளில் பிரெய்லி முறையில் தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது அவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.