r
திருத்தணி:
தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்தல் புறக்கணிப்பு முழக்கம் எழுவது வழக்கம்தான்.   ஆனால் தேர்தலுக்கு முன்பே பின்னர் அதிகாரிகள் பேச்சு நடத்தி மக்களை சமாதானப்படுத்துவர்.
ஆனால் திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தாங்கள் அறிவித்தபடியே தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். மிட்டகண்டிகை மக்கள் தங்களது கிராமத்துக்கு கடந்த இருபது  ஆண்டுகாலமாக அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. ஆகையால் வாக்குப் பதிவை புறக்கணிக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் அந்த கிராமத்தில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதையடுத்து  அரசு அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.