டில்லி:
ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது கூடுதல் பதவியான பார்வையாளர்களாக பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. அதனை மீறி பதவியில் யாரும் பதவி வகிக்ககூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ பார்வையாளர் பதவியை 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டேன். மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை எடுத்தேன். இந்த பதவியை எனக்கு கொடுத்த போது நான் மறுப்பு தெரிவித்தேன். இதுவரை என் மீது எந்த புகாரும் இல்லை. நான் மகிழ்ச்சியுடன் செல்கிறேன்’’ என்றார்.