தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் முகமது அலி
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் முகமது அலி

பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்தார். அவருக்கு வயது  74.
முன்னாள் உலக குத்து சண்டை சாம்பியன் மூச்சு திணறல் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் . இவரது இயற்பெயர் காசியஸ் மர்செல்லஸ் கிளே. பின்னாளில் இசுலாமியராக மதம் மாறி, தனது பெயரை முகது அலி என்று வைத்துக்கொண்டார்.
13341943_10154260475339048_1165769101_n
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள லூயிஸ்வில் என்ற நகரத்தில் , 17-01-1942 இல் பிறந்தவர்.  கறுப்பினத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் வென்று உலகப்புகழ் பெற்றார்.