பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
முன்னாள் உலக குத்து சண்டை சாம்பியன் மூச்சு திணறல் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் . இவரது இயற்பெயர் காசியஸ் மர்செல்லஸ் கிளே. பின்னாளில் இசுலாமியராக மதம் மாறி, தனது பெயரை முகது அலி என்று வைத்துக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள லூயிஸ்வில் என்ற நகரத்தில் , 17-01-1942 இல் பிறந்தவர். கறுப்பினத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் வென்று உலகப்புகழ் பெற்றார்.