யங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றஞ்சாட்டப்பட்டு கத்தார் நாட்டை வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்தி உள்ளன.

இதையடுத்து வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கத்தார் கூறி உள்ளது.

சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தை யும் முறித்துக் கொண்டுவிட்டன. தங்கள் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ள வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கத்தார் கூறி உள்ளது.

உறவுகளை துண்டித்துள்ள வளைகுடா  நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கத்தார் அறிவித்துள்ளது.

பிரான்சில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி இதை தெரிவித்து உள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தை சர்வதேச விதிகளின்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், தங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பாக கூறப்படுவதை மறுத்த அவர், சவுதி அரேபியாவும் அதன் கூட்டணி நாடுகளும் உறவை ஏன் துண்டித்தன என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

கத்தாருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது,

‘கத்தார் நாட்டினை அராபிய வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பிரச்னைகள் ஒருபோதும் தீர்ந்துவிடாது.

கத்தார் தீவிரவாதத்துக்குத் துணை செல்கிறது எனக் கூறப்படுவது கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு தான். இதுகுறித்து விசாரணை செய்யலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.