எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு

Must read

டெல்லி: பிகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி  நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால்,  நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும், அமளி தொடர்ந்ததால், மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்பு காட்டி வந்த நிலையில், டெலிபோன் ஒட்டுக்கேட்பு,’பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம், விவசாயிகள் போராட்டம் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெகாசஸ் விவகாரம்  குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், காங்கிரஸ், டி.எம்.சி, திமுக, இடது மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவையில் இதே போன்ற காட்சி காணப்பட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். மீண்டும் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.

முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

More articles

Latest article