ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புரதத்தின் உதவியினால் புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா இருந்து பாதுகாக்கும் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். இது பல உயிர்களைக் காக்க உதவும் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கா, மசகுசெட்ஸ்( Massachusetts)ல் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகம்

போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, நெய்செரியா மெனிங்கிடிஸ் (Neisseria meningidis) எனும் பாக்டீரியாவின் வெளிப்புறத்தில் காணப்படும்  போர்-பி (PorB) என்ற புரதத்தை சுத்தப்படுத்தி அதனை ஒரு நல்ல தடுப்பூசியாகச் சோதித்துப் பார்த்ததில் இந்த முடிவுகள் மிகவும் திருப்திகரமாக வந்துள்ளது.

நெய்செரியா மெனிங்கிடிஸ் (Neisseria meningidis)

பொதுவாக, தடுப்பூசிகள் கீழ்கண்ட இரண்டில் ஒன்றை செய்ய வல்லவை. அதாவது, ஒன்று ஆன்டிபாடி தயாரிப்பு அளவினை அதிகரிக்கும் அல்லது உடலுக்கு ஊறுவிளைவிக்கும் பொருட்களை நேரிடையாக அழிக்கும் செல்நச்சு T உயிரணுச் செல்களை உற்பத்திச் செய்யும் திறன் கொண்டவை.
எதனால் இந்தத் தடுப்பூசி சிறந்தது ?
இந்த PorB புரதத்திலிருந்து தயாரிக்கப் படும் தடுப்பூசி, செல்நச்சு T உயிரணுக்கள்  உற்பத்திச் செய்து குற்றமிழைக்கும் செல்களை நேரிடையாகக் கொல்வதுடன், உடலில் ஆன்டிபாடி தயாரிப்பு அளவினையும் அதிகரிக்கும் திறன் கொண்டு விளங்குவதே இந்தத் தடுப்பூசியின் தனித்தன்மை ஆகும்.

ஆய்வின் விளைவுகள்:
தடுப்பூசி கூட்டிகள் எவ்வாறு வேலை செய்கின்றன, அதனை சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி பெருமளவில் உதவும்.

http://www.bumc.bu.edu/microbiology/people/faculty/lee-m-wetzler-md/
பேராசிரியர் லீ வெட்ஸ்லர்

ஆய்வின் முதன்மை ஆசிரியர் லீ வெட்லெர் (Lee Wetzler) , “இந்த ஆய்வு பரந்த தாக்கங்கள் கொண்டுள்ளன. அது உடல் பாக்டீரியா தொற்றுக்களை இனம் காணவும் அதனை எதிர்த்துப் போராட மட்டும் உதவுவதில்லை, உடல் தன் சொந்த உறுப்பு இயந்திரமாகப் பயன்படுத்தி புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவ சாத்தியமுள்ளது. “எனக் கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட முறை:

அவர்கள் இரண்டு சோதனை மாதிரி முறைகளைப் பயன்படுத்தினர்:
• முதல் மாதிரியில் எதிரியாக்கியுடன் சேர்ந்து கலப்பு PorB புரதத்துடன் ஒரு தடுப்பூசி வழங்கப்பட்டது.
• இரண்டாம் மாதிரியில் எதிரியாக்கி (Antigen) மட்டுமே வழங்கப்பட்டது

சோதனையின் முடிவு:

உடன் தடுப்பூசி மட்டுமே சோதிக்கப்பட்ட மாதிரியுடன் ஒப்பிடும்போது PorB புரதமும் சோதிக்கப்பட்ட மாதிரியில், செல்நச்சு T செல்கள் உற்பத்தி எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்தது நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் தடுப்பூசியுடன் செலுத்தப்படும் இணை மருந்துகள் (adjuvants) நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு ஒழுங்குபடுத்தும் என்பது குறித்த ஆழமான புரிதல்கள் விளக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள்” சயன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்” எனும் ஆய்விதழில் வெளியிடப் பட்டுள்ளன.