த்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர், இமார்த்தி தேவி.
சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர். பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு கொரோனா இருப்பதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில் குவாலியரில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘’ உங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறப்படுகிறதே?’’என்று கேட்டபோது கொந்தளித்து போனார்.

‘’நான் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவள். என் பக்கத்தில் கூட கொரோனா நெருங்காது’’ என்று படபடத்தார்.
அமைச்சர் இமார்த்தி தேவி, மாதவராவ் சிந்தியாவின் ஆதரவாளர்.

காங்கிரசில் இருந்து சிந்தியா விலகியதும், அவரோடு சேர்ந்து காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களில் அவரும் ஒருவர்.

-பா.பாரதி.