பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Must read

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

இவரது அமைச்சரவையைச் சேர்ந்த சிலரும் கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினர், இதனால் அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஜான்சன்.

இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் மீதான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை, ஒரு பிரதமருக்கு உண்டான தகுதியோ நடவடிக்கையோ அவரிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று வரை சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் பிரிட்டன் அரசு திணறி வந்தது.

சொந்த கட்சியினரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் அவருக்கு ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று நேற்று தெரிவித்திருந்தார், இந்த நிலையில் கல்வித் துறை செயலாளராக செவ்வாயன்று பதவி ஏற்ற மிச்செல் டோனலன் இன்று தனது ராஜினாமாவை அறிவித்தார். இவரை தொடர்ந்து மேலும் 5 அமைச்சர்கள் இன்று ராஜினாமா செய்தனர்.

இதனை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் சம்மதம் தெரிவித்ததாக பிரிட்டன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி … அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 29 பேர் ஒட்டுமொத்த ராஜினாமா…

More articles

Latest article