புதுடெல்லி:
ல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், இப்போதே அதை தொடங்க வேண்டும், உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.