லக்னோ:
உ.பி. அமைச்சர் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் சர்ச்சைக்குறிய பே ச்சுக்களை தொகுத்து வெளிட்டுள்ளார். இது முதல்வருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உ.பி. அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜக.வில் இணைந்தார். இவரது மகள் சங்கமித்ரா மவுரியா மோடித்துவா என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் வில்லங்கமான பேச்சுக்களை மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.
‘‘யோகாவை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’’. ‘‘சூர்ய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்களை கடலில் வீச வேண்டும்’’ போன்ற யோகியின் சர்ச்சைக்குறிய பேச்சுக்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
அதோடு, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யோகியின் ஒரு வீடியோ பேச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அ ந்த பேச்சில், ‘‘ஒரு இந்து பெண்ணை முஸ்லிமாக மாற்றினால், நாங்கள் 100 முஸ்லிம் பெண்களை இ ந்துவாக மாற்றுவோம்’’ என்று இடம்பெற்றிருந்தது.
இந்துத்வா பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட முகமது அக்கலாக் குறித்து யோகி பேசுகையில், ‘‘அக்கலாக் பாகிஸ்தான் சென்று வந்த செய்தியை நான் படித்து தெரிந்துகொண்டேன். அவர் அங்கிருந்து வந்த பின் அவரது செயல்பாடுகள் மாறிவிட்டன. அவர் ஏன் பாகிஸ்தான் சென்று வந்தார் என்பதை அரசு கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவர் மகிமைப்படுத்தப்பட்டார்’’ என்றார்.
அதே பக்கத்தில், ‘‘நாங்கள் இந்தியாவில் எல்லோரையும் இந்துவாக மாற்றுவோம். உலகம் முழுவதும் காவி கொடியை பறக்கச் செய்வோம். மெக்காவில் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய முடியாது. வாடிகனில் கிறிஸ்தவர் அல்லாதவர் நுழைய முடியாது. இதை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்று யோகியின் பேச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் யோகி ஒரு இந்துத்வா தலைவரை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் தற்போது முதல்வராக இருப்பதால் பார்த்து பேச வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கமித்ரா கூறுகையில், ‘‘முதல்ராக பதவி ஏற்ற பிறகு அவர் தன்னை மாற்றிக் கொண் டுள்ளார். சர்ச்சைகளில் இருந்து யோகி விலகியிருக்கிறார். அதை தான் நான் புத்தகத்தில் குறிப்பிட் டுள்ளேன். அவர் தற்போது முதல்வர். அதனால் அவரது நோக்கத்தில் மாற்றம் தேவை’’ என்றார்.