மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவன் போனிகபூர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வருகிறார். மூன்று படங்களுமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

போனிகபூர் தயாரிக்க அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷுட்டிங் 10 மாதங்களாக முடங்கி கிடந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் தொடங்கியது. ஆனால் ஷுட்டிங், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அவர் தயாரிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.

போனிகபூர், ‘மைதான்’ என்ற இந்தி படத்தை தயாரித்து முடித்துள்ளார். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி போனிகபூரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ராம்சரண் – ஜுனியர் என்.டி.ஆர். நடித்து, ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற தெலுங்குப்படம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி படத்துக்கு சர்வதேச மார்க்கெட் உள்ளது.

மூன்று நாள் இடைவெளியில் இரண்டு படங்களும் மோதிக்கொண்டால், தனக்கு நஷ்டம் ஏற்படும் என கருதிய, போனிகபூர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு ராஜமவுலியிடம் பேசியுள்ளார்.

ஆனால் ராஜமவுலியோ “பட ரிலீஸ் விவகாரம், தயாரிப்பாளர்கள் சம்மந்தப்பட்டது. இதில் நான் தலையிட மாட்டேன்” எனக்கூறி விட்டார். இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார், போனிகபூர்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]