தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் நாளை (மே 1) தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கினார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், “கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
#StayHomeStaySafe pic.twitter.com/QnLMeOk8JJ
— Boney Kapoor (@BoneyKapoor) April 30, 2020
இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர்.