ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடும் போனி கபூர்

Must read

மும்பை

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு அவர் கணவர் போனி கபூர் அளிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து அகில இந்திய நம்பர் 1 நட்சத்திரமானவர் ஸ்ரீதேவி.    பல வருடங்கள் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்துள்ளார்.   இவருடைய கணவர் போனி கபூர்.  இவருக்கு ஜான்வி, குஷி  என இரு மகள்கள் உள்ளனர்.

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் இருந்த குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.    இது உலகெங்கும் உள்ள அவர் ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்தியது.

ஆதரவற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவியின் புடவை ஒன்றை போனி கபூர் ஏலம் விடுகிறார்.   இந்த ஏலம் இணைய தளம் மூலம் நடக்கிறது.   இதற்கான குறைந்த பட்ச விலை ரூ.40,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

More articles

Latest article