பாம்பே தங்கக் கோப்பை ஹாக்கி: காலிறுதியில் பஞ்சாப் தேசிய வங்கி, கடற்படை அணி

Must read

438700-hockey-gerenic700மும்பையில், 51-வது அகில இந்திய பாம்பே தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் நேற்று பஞ்சாப் தேசிய வங்கி அணி – சிஏஜி அணி (தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம்) மோதின. பஞ்சாப் தேசிய வங்கி 4-3 என்ற கோல் கணக்கில் சிஏஜி அணியைத் தோற்கடித்தது. இது பஞ்சாப் அணிக்கு இரண்டாவது வெற்றி ஆகும். இதனால் ‘சி’ பிரிவில் 6 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் ‘டி’ பிரிவில் இந்திய கடற்படை அணி 5-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் கடற்படை அணியும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

More articles

Latest article