சென்னை: திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு  இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக தினசரி    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே தலைமைச்செயலகம், உயர்நீதிமன்றம் உள்பட பல பகுதிகளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இல்லம் உள்பட பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று சென்னையில் திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நடந்த சோதனையில் புரளி என தெரியவந்தது.