சென்னை

நடிகர் விஜய் இல;லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என போலீசார் தெரிவித்தனர்.