சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்பை அடுத்து காவல்துறையினர் கோயிலில் இருந்த பக்தர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர்.

கோயிலுக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை செய்த அவர்கள் அங்கு சந்தேகப்படும் படியான எந்தவொரு பொருளும் இல்லை என்று கூறினர்.

இதனால் கோயிலுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இருப்பினும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த நபர் குறித்த விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.