
சென்னை:
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வீசப்போவதாக மர்ம நபர் யாரோ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில, தொலைபேசி வாயிலாக மர்ம நபர் மிரட்ட விடுத்த எண், காஞ்சிபுரம் பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel