சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என தெரிய வந்துள்ள நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை காவல்துறைக்கு இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள எழிலகம் கட்டிடத்திலும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் போனில் பேசிவிட்டு உடனே கட் செய்துவிட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்,
மற்றொரு புறகம், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அதுபோல மற்றொரு குழு, சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தியது. இதனால், மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்தில் பரபரப்பு உண்டானது.
இரு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், அது புரளி என தெரிய வந்தது. இதற்கிடையில், போலீசார், வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்ட போன் எண் குறித்து விசாரித்து, மிரட்டல் விடுத்த பாலாஜி என்பவரை கைது சய்தனர். . அவரிடம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.