சென்னை:

சென்னை விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மர்ம நபர் ஒருவர் பள்ளிக்கரணை போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதார். இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மற்றும் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளையும், அவர்களது உடமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.