சென்னை

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி செய்தியினால் விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.    அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   ஏற்கனவே சோதனை இடப்பட்ட பயணிகளின் பொருட்கள் மீண்டும் மறு சோதனை செய்யப்பட்டு வருகிறது.   இந்த சோதனை விமான நிலையத்தில் உள்ள பயணிகளிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.