நான் ஏற்கனவே நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் : மாதுரி தீட்சித் கோபம் 

Must read

மும்பை

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாம் ஏற்கனவே நடித்துக் கொண்டு இருப்பதால் ,மீண்டும் நடிக்க வந்ததாகக் கூற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கினார்.  திருமணத்துக்குப் பிறகு அவர் தனது பாத்திரங்களை மிகவும் தேர்வு செய்து நடித்து வந்தார்.   தற்போது அவர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் தி ஃபேம் கே என்னும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.  இது குறித்து பத்திரிகைகள் மாதுரி தீட்சித் மீண்டும் நடிக்க வந்ததாகச் செய்திகள் வெளியிட்டனர்.

இது மாதுரி தீட்சித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் செய்தியாளர்களிடம்,”நான் தி ஃபேம் கேம் வெப்தொடரில் நடிகையாகவே நடிக்கிறேன். ஆகவே இந்த வேடம் எனக்குக் கஷ்டமாக இல்லை. ஊடகத்தில் நான் இத்தொடரில் நடித்திருப்பதால், மாதுரி கம் பேக் என்று கூறி மீண்டும் நடிக்க வந்த மாதுரி என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றனர்.

நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திரும்ப வர நான் எங்கும் ஓடிவிடவில்லை. இன்னும் நான் சினிமா துறையில்தான் இருக்கிறேன். நான் அமெரிக்காவை விட்டு குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி பல வருடங்களாகி விட்டது.

நான் அவ்வப்போது படங்களிலும் நடிக்கிறேன். எனவே நான் மீண்டும் நடிக்க வந்திருப்பதாகச் சொல்வது முட்டாள்தனம். இனி இப்படிச் சொல்லவேண்டாம்.” என மாதுரி தீட் சித் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article