‘மாயவன் ரீலோட்’ – ல் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்….!

Must read

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘மாயவன்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் இந்தி டப்பிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மாயவன்’ படத்தின் 2-ம் பாகமாக ‘மாயவன் ரீலோடட்’ படத்தை அறிவித்தார் சி.வி.குமார்.

தற்போது ‘மாயவன் ரீலோடட்’ படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது.

இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருட கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது

இதுவொரு சயின்ஸ் பிக்ஷன் என்பதால் அதிக கலை இயக்கமும், சிஜி வேலைகளும் தேவைப்படும் என்று கூறியிருப்பவர், மாயவனில் ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்தது போல், மாயவன் ரீலோடில் இந்தி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாக கூறினார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

 

More articles

Latest article