புளோரிடா:

மெரிக்கா புளோரிடாவில் உள்ள ஆற்றில் போயிங் 737 ரக விமானம் ஒன்று விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணம் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானம் தண்ணீரில் மூழ்காமல் மிதந்த நிலையில், பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏற்கனவே தொடர் விபத்துக்கள் காரணமாக போயிங் 737 விமானங்களுக்கு உலக நாடுகள் பல தடை விதித்துள்ளன.  இந்தியா சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங் விமானம் பறக்க முழுமை யாக தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் போயிங் விமான சேவை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை  அமெரிக்காவின் குவாண்டநாமோ விமான நிலையத்திலிருந்து புளோரிடாவுக்கு  வந்த  விமானம் அங்கு தரை யிறங்கி விட்டு, பின்னர் புறப்பட்டு சென்ற நிலையில், திடீரென அருகிலுள்ள   செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவராத நிலையில், சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமானம் ஆற்றில் பாய்ந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜேஎஸ்ஓ மரைன் யுனிட், இந்த விமான விபத்தில் விமானம் ஆற்றில் மூழ்க வில்லை என்றும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.