மயிலாடுதுறை:
சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்.

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண் ஓரான், பல்ஜித் ஓரான் ஆகிய தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.