சமீபத்தில் நடைபெற்ற போயிங் 737 எதியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து பல நாடுகள், போயிங் 737 விமானம் பறக்க தடை செய்துள்ளன. ஆனால் இந்தியா தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
விமான பயணிகளின் உயிர்கள் மீது அக்கறையில்லாமல் மத்தியஅரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக, போயிங் விமானங்களை அதிகம் பயன்படுத்தி வரும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், பாஜக ஆதரவாளரின் விமான நிறுவனம் என்பது தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாகவே மக்களின் உயிர்மீது அக்கறையில்லாமல், தனது ஆதரவாளர்களின் வருமானத்தை பெருக்கும் நோக்கில், போயிங் 737 ரக விமானத்தை தொடர்ந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா சென்ற போயிங் 737 மாக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளனதில் அதில் பயணம் 157 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதுபோல கடந்தஆண்டு அக்டோபர் இந்தோநேசிய தலைநகர் ஜாகர்தாவில் இருந்து சென்ற இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த 189 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க தயாரிப்பான போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்கள் மீது பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், அந்த விமானம் பறக்க பல நாடுகள் தடை விதித்து வருகின்றன.
ஏற்கனவே சீனா தனது நாட்டில் உள்ள அனைத்து போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க இடைக்கால தடை விதித்துள்ளது. அதுபோல, சிங்கபூர் அரசும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா, போயிங் 737 விமானம் இயங்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போயிங் 737 விமானம் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உலக நாடுகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகினற்ன. சீனா மட்டும் 76 போயிங் விமானங்களை வாங்கி இருப்ப தாக கூறப்படுகிறது. மேலும் விமானங்கள் வாங்க முடிவு செய்திருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விபத்து காரணமாக, போயிங் விமானம் வாங்குவதை நிறுத்தி வைத்தும், விமானம் பறக்கவும் தடை விதித்துள்ளது.
பொதுவாக போயிங் 737 விமானத்தை இயக்கும் விமானிகள் குறைந்த பட்சம் 1000 மணி நேரமாவது விமானத்தை இயக்கி இருக்க வேண்டும். சமீபத்தில் எதியோப்பியாவில் இருந்து கென்யா சென்ற போயிங் 737 மாக்ஸ் விமானத்தை இயக்கிய விமானிகள் இருவருக்கும் சேர்த்து, 1000 மணி நேர அனுபவம் இருந்த நிலையிலும், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேரை காவு வாங்கி உள்ளது. இவ்வளவு அனுபவம் உள்ள விமானிகள் விமானத்தை இயக்கிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) போயிங் 737 விமானம் தொடர்ந்து பறக்க அனுமதி வழங்கி உள்ளது. இது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விமானத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு, நம்மிடம் அந்த விமானத்தை இயக்க அனுபவமுள்ள விமானிகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சரியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவைகள் சரியாக இருக்கும் வரை விமானம் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் என்று கூறினார்.
ஆனால், இந்தியாவில் பெரும்பாலான போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பயன்படுத்துவது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம். இந்த நிறுவனம் பாஜக ஆதரவாளருடையது என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆதரவாளர்களின் வருமானத்தை பெருக்கவே பாஜக அரசு விமான பயணிகளின் உயிரிலும் விளையாடி வருகிறது…