காண்கிரீட் போட்டு இரு ஆழ்துளைகளும் மூடப்படும் என்றும், அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “2 ஆழ்துளை கிணறுகளையும் மூடிவிட்டு தான் இங்கு இருந்து நான் செல்வேன். காண்கிரீட் ரெடிமிக்ஸ் கொண்டுவர சொல்லியுள்ளேன். 7 மணிக்கு அது வந்துவிடும். அதன் பின் காண்கிரீட் போட்டு ஆள்துழைகள் மூடப்படும். குழந்தையின் உடல் அழுகிய நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை எப்போது இறந்தார் என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும். அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. உடலை தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.