கொடைக்கானல்

சுற்றுலாத்தலமான கொடைக்கானல் ஏரியில் படகில் சவாரி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளன. அவற்றில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலும் ஒன்றாகும்.  இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்ய அனைவரும் விரும்புவது வழக்கமாகும்.    இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தற்போது இந்த படகு சவாரி கட்டணம் சாதாரண கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் என இரண்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு கட்டணமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்புக் கட்டணமாக அதிக கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.

இதில் சாதாரண கட்டணமான ரூ.100 தற்போது ரூ.200 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.  சாதாரண கட்டணம் செலுத்துவோர் வரிசையில் நின்று படகுகளில் ஏற வேண்டும்.  சிறப்புக் கட்டணமாக ரூ.250 அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறப்புக் கட்டணம் செலுத்துவோர் வரிசையில் நிற்காமல் நேரடியாகப் படகில் ஏறலாம்.

உள்ளூர் மக்கள் மற்றும் சாமானிய சுற்றுலாப் பயணிகள் இந்த கட்டண உயர்வால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.