சென்னை
போலீஸ் சம்மனை ஒட்ட சீமான் இல்ல வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திரைப்பட நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விசாரணைக்கு ஆஜராகக் கோரி நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் நேற்று சம்மனை ஒட்டினர்.
அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் அதை கிழித்து எறிந்ததால், போலீசாருக்கும், அவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜ் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இந்த நிலையில், நீதிமன்ற காவலில் 15 நாட்கள் சிறையில் காவலாளி அமல்ராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சீமான் இல்ல வாசலில் பொலீஸ் சம்மன் ஒட்ட தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த வெள்ளை நிற போர்டில்,
“சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச் செல்லவும்”
என்று நீல நிற1 மார்க்கர் பேனாவால் எழுதப்பட்டுள்ளது.