குமார் கருப்பையா (  Kumaran Karuppiah) அவர்களின் முகநூல் பதிவு:
download
இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் உயிர்வாழ தினந்தோறும் சாப்பிடும் உயிர் காக்கும் மாத்திரை IMATINIB ஒரு மாத்திரை ரூ.200 ஆகிறது, இதை நடுத்தர மற்றும் ஏழைகள் எப்படி வாங்க முடியும், இதை அரசு, அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கினால் என்ன என முகநூலில் பதிவிட்டேன்.
அதை அப்படியே முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடிதமாகவும் எழுதினேன்.

a
அதற்கு பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதில், “நீ ங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி தலைமை அதிகாரிகளை சந்தித்து, அந்த மாத்திரைகளை இலவசமாக பெறலாம், கரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரி தலைமை அதிகாரியை நாடவும்”  என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதன் நகல்,   அரசு மருத்துவ கல்லூரி தலைமை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு நடவடிக்கையில் உள்ளம் மகிழ்கிறேன்!