டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது புதியதாக கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் நோயும் மற்றொருபுறம் மிரட்டி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள சிலர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள்  வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் எடுக்கும் டயாபட்டீஸ் உள்ப சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாகிளுக்கு, கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலில் சைனஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ரக பூஞ்சை, அப்படியே பயணித்து மூளை வரை சென்று தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்பின்றி தப்பிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

கருப்பு பூஞ்சை நோயின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, அதை தொற்றுநோயாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியது. அதன் படி, அனைத்து மாநில அரசுகளும் கருப்பு பூஞ்சை நோயைத் தொற்று நோயாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில்,  நாடு முழுவதும் இதுவரை 7,250 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரபல பத்திரகையான இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 219 பேர் உயிரிழந்ததாகவும் அதிகப்பட்சமாக குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.