த்தரபிரதேச மாநிலம் இன்னோவா தொகுதி பா.ஜ.க.. எம்,பி. சாக்‌ஷி மகராஜ், ஜார்கண்ட் மாநிலம் கிரிதி என்ற ஊருக்கு காரில் சென்றுள்ளார்.

பிற மாநில நபர்கள் அந்த மாநிலத்தில் நுழைந்தால் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அது தெரிந்தோ, தெரியாமலோ அவர், கிரிதிக்கு சென்று விட்டு, உ.பி. மாநிலத்துக்கு சாலை மார்க்கமாக திரும்பி கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த போலீசார் அவரை பிர்தாண்ட் என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர்.

சாந்திபவன் ஆசிரமத்தில் எம்.பி.மகராஜை , கட்டாயப்படுத்தி 14 நாள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
மகராஜ், உ.பி. மாநில தலைமை செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார்.

எனினும் அவரை, விடுவிக்க ஜார்கண்ட் போலீசார் மறுத்து விட்டனர்.
‘’ ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவை, அவர் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் இருந்து வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார், ஆனால் என்னை மட்டும் தனிமைப்படுத்தி விட்டார்கள்’’ என புலம்பிய படி, ஆசிரமத்துக்கு சென்றார், மகராஜ்.
ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்.ஜே.டி.கூட்டணி ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.