சென்னை,

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில்,  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது  தமிழக  பாஜக இப்போதே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது தொடர்பான பல கட்ட விசாரணை நடைபெற்று வந்துள்ள நிலையில், பிப்ரவரிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உயர்நிதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு சார்பில்,  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடந்து வரும் தொகுதி வரையறை பணி முடிய  2018 பிப்ரவரி  மாதம் ஆகும்  என்றும், அதன்பிறகே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையிலும்,  மார்ச், ஏப்ரலில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற இருப்பதாலும் உள்ளாட்சி தேர்தல்  மே மாத பள்ளி  விடுமுறையின்போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக பாரதியஜனதா தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்போது, தமிழக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள  வேட்பாளர்கள்  ஆன்லைனில் விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து, தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.

மேலும், செய்தியாளர்கள் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கிய தேசிய கட்சிகள் தமிழக்ததில் காலூன்ற முடியாது என்று  பாஜக குறித்து, அதிமுக எம்.பி. தம்பித்துரை பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழிசை,  திராவிடமும் தேசியமும் வேறு அல்ல இரண்டும்  ஒன்றுதான் என்று கூறினார்.