ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. இது மத்தியில் ஆளும் பாரதியஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு இடைத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் பாஜக முதல்வராக வசுந்தராஜே சிந்தியா உள்ள நிலையில், நடைபெற்று முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்து இருப்பது, மத்திய அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மற்றும், மண்டல்கர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 29ந்தேதி நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் வந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முடியும் நிலையில் உள்ளது.
இதுவரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
சுமார் 2 மணி நிலவரப்படி, அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகு சர்மா 45,321 வாக்குகள் அதிகம் பெற்றுபாஜக வேட்பாளர் ராம் சுவரூப் லம்பாவை விட, முன்னிலை வகித்து வருகிறார். இதன் காரணமாக அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அல்வார் தொகுதியில், பாஜக வேட்பாளரான ஜஸ்வந்த் சிங் யாதவை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளரான கரன்சிங் யாதவ் 72இ101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரது வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்வி வேக் தக்கார் 11136 வாக்குகள் முன்னிலையில், பாஜக வேட்பாளர் சக்தி சிங் ஹடாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதன் காரணமாக ராஜஸ்தானில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் பிடித்துள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்திக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள இன்று, நடைபெற்று முடிநத இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை யில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்துள்ள தகவல் வெளியாகி இருப்பது…. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதேபோல், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் மற்றும், 8 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய தேர்தல் முடிவு பாஜக அரசுக்கு விழுந்த மரண அடி என விமர்சிக்கப்படுகிறது.