குஜராத் மாநிலம் வடோதரா மாவட்ட கட்சி அலுவலகத்தை சோட்டா உதேபூர் பகுதியில் அம்மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் நேற்று திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டார், பிரதமர் மோடி புதிய வளர்ச்சித் திட்டங்களுடன் செயல்பட்டு வரலாறு படைத்து வருகிறார் என்று பேசினார்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிஆர் பாட்டீல் பேச முயற்சி செய்த போது கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர் ஒருவர் ஆவேசமாக எழுந்து, “இங்கே கிராமங்களில் ஆரம்ப பள்ளிக்கூட இல்லை இதில் கட்சி அலுவலகம் ஒரு கேடா?” என்று கேள்வி எழுப்பியதோடு “எதைச் சொல்லி நாங்கள் மக்களிடம் ஒட்டு கேட்பது ?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து சிஆர் பாட்டீலின் பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்கள் அவரை இருக்கையில் உட்காரும்படி கூறினர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.