தமிழக அரசை பா.ஜ.க நேரடியாக இயக்கும்!! ஹெச். ராஜா உறுதி

Must read

கோவை:

தமிழக அரசை பாஜக நேரடியாகவே இயக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். புறக்கடை வழியாக இருந்து தமிழக அரசை பாஜக இயக்காது. முன்பக்கமாக அதாவது நேரடியாகவே தமிழக அரசை இயக்குவோம்.

தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை பாஜக பயன்படுத்துகிறது என்று யாராவது குற்றம்சாட்டினால் அவர்கள் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சி இருப்பதே தங்களுக்கு சாதகமாக சூழல் வரும்போது அதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்குத்தான்” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

More articles

Latest article