லக்னோ: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கம் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 2022ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான பணிகளை இப்போதே பல கட்சிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது,
தற்போதைய பாஜக ஆட்சிமீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரபிரதேச தேர்தலில் மக்களின் கோபம் வெளிப்படும். பாஜக படுதோல்வி அடையும்.
கடந்த தேர்தல்களின்போது, பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது சரியாகப்படவில்லை. அது நன்றாக அமையவில்லை, ஆதலால், இனிவரும் தேர்தல்களில், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கம் எண்ணம் இல்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (காங்கிரஸ்) மற்றும் காங்கிரஸை பெயரிடாமல் அகிலேஷ் யாதவ் கூறினார்: “பெரிய கட்சிகளுடனான எனது அனுபவம் நல்லதல்ல, நான் அவர்களுடன் எந்த கூட்டணிக்கும் வரமாட்டேன். எங்கள் கட்சி கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கருத்துடைய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொள்ள திட்டமிட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் உள்ள 403 இடங்களில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் கொரோனாதொற்றின் உண்மையான எண்ணிக்கையை மறைத்ததால்தான் மக்கள் கும்ப மேளாவுக்குச் சென்றார்கள். ஆனால், அங்கு சென்றதால்தான், உ.பி.யில் தொற்று பரவல் அதிகரித்தது, கிராமப்புறங்களில் கொரோன தொற்றின் தாக்கம் கடுமையானது. கொரோனா மரணங்களை அரசு மறைக்கிறது. இதனால், மக்கள் யோகி ஆதித்யநாத் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோபம், வருகின்ற உத்தரபிரதேச சட்ட மன்ற தேர்தலில் பாஜகவை தோல்வியடைய செய்யும் என்று தெரிவித்தார்.