
சென்னை,
தமிழகத்தில் தற்போது மெர்சல் படம் குறித்தே அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. பாரதியஜனதாவின் மிரட்டலுக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்ததைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் பாஜக குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைப்பவர் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்த திருமா, மெர்சல் திரைப்படத்துக்கு தேவையில்லாத விமர்சனம் மூலம் பா.ஜ.க. கூடுதல் விளம்பரத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. விஜய்யை தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் அக்கட்சி விரும்புகிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனுக்குத்தான் மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைக்கும் குணம் உண்டு. அவரது கட்சித் தலைமையகம் இருக்கும் இடம்கூட அப்படி மிரட்டி வளைக்கப்பட்டதுதான். அதுபோல பாஜக கட்சியையைும் அவர் நினைத்துவிட்டார் போலும். ஆனால் அப்படி எவரையும் மிரட்டி வளைக்க வேண்டிய கட்டாயம் எங்கள் கட்சிக்கு இல்லை” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]