நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த 2 பேர் இடைநீக்கம்

Must read

புதுடெல்லி:
ர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகாவை சேர்ந்த இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது.

சமீபத்திய தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பாஜக இடைநீக்கம் செய்தது. டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சி நீக்கியுள்ளது.

சஸ்பெண்ட் கடிதத்தில், “பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளீர்கள்… மேலும் விசாரணை நிலுவையில் உள்ளதால், கட்சியில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என, கட்சியின் மத்திய ஒழுங்குக் குழு குறிப்பிட்டுள்ளது.

More articles

Latest article