டில்லி,

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பங்கேற்ற பாஜ செய்தி தொடர்பாளர், வந்தே மாதரம் பாடலை தப்புப்தப்பாக பாடி தனது தேசப்பற்றை நிரூபித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,  பாடாமல் போனால் என்ன தவறாகிவிடும்? வந்தே மாதரத்தை பாடாமல் போவதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் மத்திய அரசில் அங்கம் வகித்து வரும் பாஜ கூட்டணி கட்சியான   இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியிருந்தார்.

வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 7, 2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வந்தே மாதம்  பாடல் குறித்து ஜீ தொலைக்காட்சியில் ஜீ சலாம் என்று ஒரு விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில் பாரதிய ஜனதா சார்பில் நவீன்குமார், அகில இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியத்தின் முஃப்தி இஜாஸ் அர்ஷத் கஸ்மி , காங்கிரஸ் சார்பில் செய்தி தொடர்பாளர் சுஷி விஸ்வாஸ், வழக்கறிஞர் பிரக்யா பூஷன் மற்றும் ஆச்சார்யா விக்ரமாதித்யா உள்பட 5 பேர் பங்கேற்ற கார விவாதம் நடைபெற்றது.

அப்போது, வந்தே மாதரம் பாடல் குறித்து பேசும்போது, பாரதியஜனதா செய்தி தொடர்பானர் நவீன்குமார்,  ஆட்சிக்கு வந்ததால் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கி உள்ளோம். இது காலதாமதமானது நாட்டின் தேச பக்தியை நிரூபிப்பதற்காக இதை நாம்.  மகிழ்ச்சியாக  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய  அகில இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியத்தின் முஃப்தி இஜாஸ் அர்ஷத் கஸ்மி, முதலில் நவீன் குமார்  தனது தேசபக்தியை நிரூபிக்கும் வகையில் வந்தே மாதரம் பாடலை பாடத்தெரியுமா என்று சவால் விட்டார்.

அதையடுத்து விவாததின் ஊடே இரண்டு வரிகள் மட்டுமே நவின்குமார் பாடிக்காட்டி அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, பாஜவை சேர்ந்த நவீன் குமார், தனது மொபைல் மூலம் கூகுளில் வந்தே மாதரம் பாடலை எடுத்து வைத்துக்கொண்டு  வாசித்தார்.

அப்போது வந்தே மாதரம் பாடலின் வரிகளை புர்லகிஸ்தான், சுமந்த்ரா, புஷ்மானி,”சுஹாசினி சுமாருரா பஷினி” என தப்புத்தப்பாக  வாசித்தது  அந்த விவாதத்தை பார்த்துக்கொண்டிருந்த கட்சியினரிடையேயும், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பாஜ குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் பாஜகவினர் வந்தே மாதரம், தேசிய கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,  வந்தே மாதரம் பாடல்கூட தெரியாத ஒருவர் பாரதியஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார் என்றும்,

முதலில் பாரதியஜனதா கட்சியினர் வந்தே மாதரம் பாடல் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மக்கள்  பாட சொல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தேசியத்தை பற்றி பேசும் பாஜக முதலில் தனது கட்சியினருக்கு தேசப்பற்று குறித்து பாடம் நடத்த வேண்டும் கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பாரதியஜனதா ஆட்சி செய்து வரும்  உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிறுபான்மைதுறை நல அமைச்சராக இருக்கும், பல்தேவ் சிங் ஆலுக் என்பவர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவது குறித்த அந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அமைச்சரை வந்தே மாதரம் பாடும்படி  கூறியுள்ளனர்.

ஆனால், அமைச்சரோ வந்தே மாதரத்தில் ஒரு வரி கூட பாட மறுத்து,  “வந்தே மாதரத்தை நாட்டில் உள்ள  அனைவருமே பாட வேண்டும்” என்று கூறி பேச்சை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பாரதியஜனதாவின் தேசப்பற்றை நாறடித்தது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/zeesalaam/videos/1844739025565694/