ரித்வார

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை  படுத்திக் கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மாநிலக் கட்சித் தலைவர்களும் மத்தியக் கட்சித் தலைவர்களும் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

அவ்வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த தகவலை அவர் தனது டிவிட்டரில் ஆமோதித்துள்ளார். தமக்கு 3 நாட்களாகக் காய்ச்சல் இருந்ததால் சோதனை செய்ய்ப்ப்ட்டு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி தம்மைத் தாமே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார அருகே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.  உமா பாரதி தம்மைச் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்க் கேட்டுக் கொண்டுள்ளார்.  அத்துடன் இன்னும் நான்கு நாட்கள் கழித்து தாம் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.