சென்னை

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தாமரை சின்னத்தில்  ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. அதாவது, 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

தற்போது தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது

அதன் விவரம்:

  • கோவை- அண்ணாமலை
  • தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
  • திருநெல்வேலி :: நயினார் நாகேந்திரன்
  • கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
  • மத்திய சென்னை: மனோஜ் பி செல்வம்
  • கிருஷ்ணகிரி: நரசிம்மன்
  •  நீலகிரி (தனி): எல் முருகன்
  • பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)
  • வேலூர்: ஏசி சண்முகம் ( புதிய நீதிக்கட்சி -தாமரை சின்னத்தில் போட்டி)