மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.!

இம்பால்:

ணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்பா.ஜ., அரசு வெற்றி பெற்றது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்கள் மட்டுமே பா.ஜ. வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் 29 இங்களை பிடித்திருந்தது.

ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சுயேச்சைகளின் ஆதரவோடு பாரதியஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

பாரதியஜனதாவுக்கு தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தது. அதையடுத்து பாரதியஜனதா ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பைரன்சிங், இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அதில், அவருக்கு ஆதரவாக 33 ஓட்டுக்கள் கிடைத்தது.

இதன் காரணமாக பா.ஜ. மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது.


English Summary
BJP proved its majority in the assembly in Manipur