ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜகத் புஜாரி 10 ஆண்டுகளாக நக்சல்வாதிகளுக்கு உதவி புரிந்து வந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 2004ல் உருவான சிபிஐ –மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மக்கள் போர்ப்படை மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் நக்சல்வாதிகள் என அழைக்கப்படுகின்றனர்.  இவர்களை மாவோயிஸ்டுகல் எனவும் கூறப்படுகின்றனர்.   இவர்கள் பல மாநிலத்தில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர்.

நக்சலைட்டுகள், ஒரிசா,ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்  குறிப்பாக 10 மாவட்டங்களில் இவர்கள் கடும் அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  இவர்களையும் இவர்களுக்கு உதவி புரிவோரையும் இம்மாநில காவல்துறையினர்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அபிஷேக் பல்லவ்

சத்தீஸ்கர் மாநில காவல்துறை உயர் அதிகாரியான அபிஷேக் பல்லவ், “சத்தீஸ்கரில் நக்கல்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிவோரை வேட்டையாடி பிடித்து வருகிறோம்.  ஒரு சில இன்ஃபார்மர்கள் மூலம் சத்திஸ்கர் மாநில பாஜக பிரமுகர்களில் ஒருவரான ஜக்த் புஜாரி நக்சல்வாதிகளுக்கு உதவி புரிந்து வருவதாக தக்வல்கள் கிடைத்தன.

இதையொட்டி அவரை கண்காணித்ததில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு பலவித உதவிகள் புரிந்து வந்தது கண்டறியப்பட்டது.   சமீபத்தில் அவர் நக்சல்வாதிகளுக்கு டிராக்டர் ஒன்றை வாங்குவதில் உதவி செய்துள்ளார்.  இதையொட்டி ஜகத் புஜாரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.