டில்லி:

ஜூன் 17ந்தேதி 17வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ள நிலையில், இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத்தொடர்ந்து புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்  விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பாஜகவின் மக்களவை துணைத்தலைவராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாலாத் ஜோஷி லோக்சபா அரசு  தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டு உள்ளார். அரசு துணை கொறடாவாக அர்ஜுன் ராம் மெஹ்வால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாராளுமன்ற பாஜக தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதுபோல, ராஜ்ய சபையின் பாஜகவின் தலைவராக தவார்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜ்ய சபாவையில் துணைத்தலவர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும், முரளிதரன் துணை கொறடாவாகவும்,  நாராயணன்லால் பஞ்சாரியா ராஜ்யசபாவின் தலைமை கொறடாவாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 17ந்தேதி தொடங்கும்  நிலையில், பாஜக லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்களை அறிவித்து உள்ளது.