டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து பாஜக எம்பிக்கள் பேசினர் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியும் பேசினார்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்த்து வழங்குவது குறித்து பாஜக பேசிவந்த நிலையில் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்டமசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலாச்சார அமைச்சர் மீனாட்சி லேகி பேசும் போது ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டதை அடுத்து “வாயை மூடிக்கொண்டு உட்காருங்கள் இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” என்று மத்திய பாஜக கலாச்சார அமைச்சர் எச்சரித்தார்.
BJP's Union Minister openly threatens Opposition MPs with ED raids on Parliament floor. This abuse of power is alarming.
Her threatening statement is a clear indication that the center is leveraging ED raids to stifle the opposition's voice. pic.twitter.com/XO655ZE97a
— Raghav Chadha (@raghav_chadha) August 3, 2023
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன். சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் பாஜக அரசின் கைப்பாவைகளாக இயங்கி வருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளனர்.