அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களை பெற்றது. ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பபதிவு நடைபெற்ற நிலையில், இன்று (மே2ந்தேதே) வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம், , துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை, அண்ணாமலை போட்டிடியிட்ட அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அரவக்குறிச்சியில் முன்னதாக திமுக முன்னிலையில் இருந்தது. தற்போது பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச்.ராசா பின்னடைவை சந்தித்து வருகிறார்.