டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை நோக்கி செல்லும் பாஜக பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சீன அதிபர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில்,  ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மக்களிடமிருந்து ஒரு வலுவான அதிகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான அரசாங்கம் என்றும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி  அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,  2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு  அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கும் மோடிக்க வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் . பிரதமராக மீண்டும்  பொறுப்பேற்க உள்ளதற்கு  வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இலங்கை, இஸ்ரேல் உள்பட பல நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.